TN Teacher | ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி... தமிழக அரசு அரசாணை வெளியீடு

Tamil Nadu Government Latest News: : ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு அரசாணை மூலம் நிறைவேற்றி உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 6, 2024, 06:27 PM IST
TN Teacher | ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி... தமிழக அரசு அரசாணை வெளியீடு title=

TN Govt Teachers Seniority List: ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமோப்பு நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஆதி திராவிடர் நலத்துறை சார்நிலைப் பணியில் சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து, அத்துறைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகளை ஒரே அலகின் கீழ் கொண்டுவருமாறு அரசுக்கு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் கோரிக்கை வைத்திருந்தார். 

அந்த கோரிக்கையை ஏற்று ஆதி திராவிடர் நலத்துறை சார்நிலைப் பணி சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி அரசாணையாக வெளியிட்டுள்ளார். 

அந்த அரசாணையில், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி பட்டதாரி, ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகள் ஒரே அலகின் கீழ் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மேற்கண்ட பதவிகளுக்கு பணிநியமன நாள் அடிப்படையில் மாநில அளவிலான பணிமூப்பு, அதாவது சீனியாரிட்டி தயாரிக்குமாறு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனருக்கும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க - விரைவில் தீபாவளி 2024 பரிசு: குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிறது புதிய அறிவிப்பு!

மேலும் படிக்க - புதிய சர்ச்சை? பள்ளிகளுக்கு வந்த சுற்றறிக்கை.. இது ஆபத்தான கொள்கைத் திட்டம் -சி.பி.ஐ(எம் கண்டனம்

மேலும் படிக்க - தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News