முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் 9-ம் தேதி பேரறிவாளனுக்கு மட்டும் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு சிறைத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்காததால் அவர் தொடர்ந்து பரோலில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவு சிறைத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்ததை அடுத்து பல்வேறு சட்ட நடைமுறைகளுக்கு பின்னர் பேரறிவாளன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதில், தன்னை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார் என பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் படிக்க | பேரறிவாளன் இனி சிறை செல்லக் கூடாது: அற்புதம்மாள் கோரிக்கை
இதைத்தொடர்ந்து பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:-
பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை கூட்டாச்சி தத்துவத்தை அழிக்கும் செயல். தமிழக அமைச்சரவையின் முடிவில் ஆளுநருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் அதனை குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்வது சரியா?. அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை.
பேரறிவாளன் உட்பட 7 பேரை யார் விடுவிப்பது என்பதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் அவர் ஏன் சிரையில் இருக்க வேண்டும்? பேரறிவாளனை ஏன் நீதிமன்றமே விடுவிக்கக் கூடாது? பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு.பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. எனவே, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின்படி 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுக்கலாம்.
இந்த விவகாரத்தில் ஆளுநரை மத்திய அரசு மீண்டும் கொண்டு வர வேண்டாம். தன்னை விடுதலை செய்யக் கோரிய பேரறிவாளனின் வழக்கு அடுத்த புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | பேரறிவாளனுக்கு விரைவில் திருமணம்.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR