குட்கா விவகாரம்: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

குட்கா வழக்கை தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Last Updated : Jan 30, 2018, 01:33 PM IST
குட்கா விவகாரம்: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்! title=

குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன் பழகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தொடர்ந்தார். 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ். ஜார்ஜ் ஆகியோரது பெயர் இந்த ஊழல் பட்டியலில் உள்ளதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண் டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் பி.வில்சன் வாதிட்டார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதிட்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசு தரப்பி லும், மனுதாரர்கள் அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர் . இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தர விட்டனர்.

Trending News