உணவகங்களில் ஜி.எஸ்.டி(GST) 5% ஆக குறைக்கப் பட்டிருக்கிறதா இல்லையா? என., பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு!
உணவகங்களில் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் கடந்த நவ., 15 அன்று அமலுக்கு வந்தது.
குளிர்சாதன வசதி இல்லாத உணவகங்களில் 12 சதவீதமும், குளிர்சாதன வசதி உடைய உணவகங்களில் 18 சதவீதமும் ஜி.எஸ்.டி வரி என விதிக்கப்பட்டது. அந்த வரி தற்போது 5% குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது உணவகங்களில் ஜி.எஸ்.டி(GST) 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என ஆய்வு செய்யும் நிகழ்ச்சி பா.ஜ.க. இளைஞரணியின் சார்பாக இன்று நடத்தப்பட்டது
பா.ஜ.க. மாநில தலைவர் Dr.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சென்னை உணவகத்தில் உணவு உண்டு, கட்டணம் செலுத்தி இந்த ஆய்வினை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "உணவகங்களில் கட்டணம் குறைக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.