தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை; எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Aug 17, 2019, 12:07 PM IST
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை; எச்சரிக்கும் வானிலை மையம்! title=

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, கேரளா மற்றும் கர்நாடகாவை ஒட்டியுள்ள, தமிழக பகுதிகளில், 10 நாட்களுக்கும் மேலாக, கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி உட்பட, சில இடங்களில், அதி கனமழை பெய்தது. ஒரே நாளில் 92 செ.மீ மழை பெய்துள்ளது. 

நீலகிரி மாவட்டம் முழுவதும், 10 நாட்களாக மழை பெய்ததால், நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் என, கடும் பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்றைய வானிலையை பொருத்தவரை தமிழகத்தில் வடக்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று மதியம் வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, நெல்லை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, ஆதனூர், மெய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்தது. கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

 

Trending News