TN Board Class 11th Result 2024: தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் நாளை காலை வெளியாகயுள்ள நிலையில், இந்த ரிசல்டை எந்த தளத்தில், எப்படி பார்ப்பது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Tamil Nadu Board exam 2024: தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 ஆம் தேதி நடந்து முடிந்தது. தற்போது இதற்கான தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகயுள்ளது.
இதனிடையே அண்மையில் 10 ஆம் மற்றும் 12 ஆம் தேதி வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிகள் வெளியானது. அதன்படி தற்போது நாளை காலை 9.30 மணிக்கு தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (TN 11th Result) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படவுள்ளது.
தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
தேர்வு எழுதியவர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பார்க்கலாம். அதற்கு அவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்:
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்படி சரிப்பார்ப்பது?
https://results.digilocker.gov.in/ www.tnresults.nic.in www.dge.tn.gov.in தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
>tnresults.nic.in இணையதளத்தை தேடவும்
>11ஆம் Exam Results May 2024 என்பதை அழுத்தவும்.
>உள் நுழைவதற்கான log in லிங்க் திறக்கும்.
>உங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி-வருடத்தை குறிப்பிட வேண்டும்.
>உங்களது தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும், இதை ஸ்கிரீன் ஷாட் அல்லது டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ