Tamilnadu Tomato Price Issue: தமிழ்நாட்டில் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தமிழக அரசின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று காலை ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"தமிழகத்தில் வழக்கமான கொள்முதலை விட 15% அதிகமாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வு மக்களை பாதிக்கும் என்பதால் விலையை கட்டுப்படுத்த முதலமைச்சர் கூறினார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோடைக்காலத்தில் மிகுந்த வெப்பத்தினால் தக்காளி சாகுபடி பாதித்தது என சிலரும், ஆளங்கட்டி மழையால் தக்காளி செடி பாதிப்படைந்ததாக சிலரும், மேலும் 2-3 மாதங்களுக்கு முன்னர், தக்காளியை உழவு செய்த விவசாயிகள் அதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என இம்முறை உளவு செச்யவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இப்படி பல காரணிகள் உள்ளன.
மேலும் படிக்க | ஒரேநாளில் 2,000 பேருக்கு முதல்வர் பணி ஆணை: மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய மூன்று பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகம் இருக்கம். பிற மாநிலங்களில் இருந்தும் தக்காளியை இறக்குமதி செய்கிறோம். கோயம்பேட்டில் நாள் ஒன்றுக்கு 800 டன் தக்காளி வந்த வேளையில், 300 டன் அளவுக்கு குறைந்துள்ளது. தற்போது சற்றே அதிகம் வரத்து வந்துள்ளது என தகவல் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 62 மையங்களில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை நடந்து வருகிறது. 3 முதல் 4 நாட்களில் தக்காளி விலை முழுமையாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் தொடர் நடவடிக்கையால் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. தேவைக்கு ஏற்ப வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால் நியாய விலைக்கடைகளில் கூட குறைந்த விலையில் காய்கறிகளை விற்க தயாராக உள்ளோம்." என அவர் கூறினார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 10 ரூபாய் குறைந்து 70 ரூபாயாக விற்பனையாகிறது. மேலும், பொதுச்சந்தையில் தக்காளியின் விலை ஏற்றம் காணவதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுபடுத்த கூட்டுறவுத்துறைகளில் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளனது. அதுமட்டுமின்றி விலையேற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளியை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க | 30 பாஜகவினர் கைது... அதில் 8 பேர் உடனே சிறையில் அடைப்பு - என்ன காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ