இந்தியாவில் இந்தாண்டு சராசரிக்கும் குறைவாகவே மழைபொழிவு...

இந்தியாவில் இந்தாண்டு சராசரிக்கும் குறைவாகவே மழைபொழிவு இருக்கும் என தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Apr 4, 2019, 04:57 PM IST
இந்தியாவில் இந்தாண்டு சராசரிக்கும் குறைவாகவே மழைபொழிவு...  title=

இந்தியாவில் இந்தாண்டு சராசரிக்கும் குறைவாகவே மழைபொழிவு இருக்கும் என தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு பிறகு வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்,மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கோவை, தருமபுரி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருத்தணி, கரூர்,தஞ்சாவூர், நாமக்கல், மதுரை ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஸ்கைமெட் என்னும் தனியார் வானிலை ஆய்வு மையம் நேற்று பருவநிலை மாற்றம் குறித்த அறிக்கையை டெல்லியில் வெளியிட்டது. அதில், ‘இந்தியாவில் இந்தாண்டு சரிசரிக்கும் குறைவாகவே மழைபொழிவு இருக்கும். குறிப்பாக பருவமழைக் காலமான ஜூன் - செப்டம்பர் காலகட்டத்தில் பெரும் மழை இருக்காது. குறிப்பாக மத்திய மற்றும் கிழக்கு இந்தியா மழைக்குறைவால் கடுமையாகப் பாதிக்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு மழைப்பொழிவு குறைவதற்கான முக்கியக் காரணமே எல் நினோ என்னும் பருவநிலை மாற்றம் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பிரச்சனை, விவசாயம் பாதிப்பு ஆகிய இடர்களைச் சந்திக்கும் சூழல் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Trending News