4ஆம் அலையிலிருந்து தப்பிக்க மருந்து இதுதான்! நற்செய்தியை வெளியிட்டது ஐஐடி மெட்ராஸ்

கொரோனாவுக்கான புதிய மருந்தாக இன்டோமெதசின் என்ற மருந்தை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும் என ஐஐடி மெட்ராஸ் தன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 22, 2022, 08:01 PM IST
  • கோவிட் நோயாளிகளின் உடல் நலத்தில் நல்ல தேர்ச்சி தரக்கூடியது.
  • விலை மலிவான மருந்து ஒன்றை ஐஐடி மெட்ராஸ் பரிந்துரைத்துள்ளது.
4ஆம் அலையிலிருந்து தப்பிக்க மருந்து இதுதான்! நற்செய்தியை வெளியிட்டது ஐஐடி மெட்ராஸ் title=

கோவிட் 19 நோய் தொற்றால் பதிக்கப்பட்டவர்களுக்கு பல வகை கூட்டு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஐஐடி மெட்ராஸ் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கோவிட் நோயாளிகளின் உடல் நலத்தில் நல்ல தேர்ச்சி தரக்கூடிய, விலை மலிவான மருந்து ஒன்றை ஐஐடி மெட்ராஸ் பரிந்துரைத்துள்ளது. 

மேலும், அந்த மருந்தை 14 நாட்கள் நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்ட சோதனை முடிவுகளையும் இந்த செய்தியறிக்கையோடு வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில் உள்ளதாவது,

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட லேசான மற்றும் மிதமான கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இன்டோமெதசின் (Indomethacin) மருந்துக்கு செயல்திறன் இருப்பதை சென்னை ஐஐடி வடிவமைத்த சோதனை வெளிப்படுத்துகிறது.

இன்டோமெதசின் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய மருந்து என்பதால், லேசான கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு புதிய சிகிச்சை முறையை உறுதி செய்யும் வகையில் இந்த ஆராய்ச்சிப் பணி அமைந்துள்ளது. நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (Nature Scientific Reports) இதழில் இதன் ஆராய்ச்சி முடிவுகள் குறித்த மதிப்பாய்வு வெளியிடப்பட்டு உள்ளது.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | என்னது சென்னையில் இப்படி ஒரு இடமா!

மேலும்,

லேசான மற்றும் மிதமான கோவிட் 19 நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிசிச்சையில், ஸ்டெராய்டல் அழற்சி எதிர்ப்பு மருந்தான இன்டோமெதசின் (Indomethiacin) செயல்திறனைக் காட்டுகிறது என, அண்மையில் வெளியான நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் {hittps://www.nature.com/articles/341596 022-10370-1) என்ற தலைப்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு உள்ளது 

மிகச் சிறந்த இந்த ஆய்வு பனிமலர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சென்னை ஐஐடி-யின் பகுதிநேர ஆசிரியரும், மியாட் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை இயக்குநருமான டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது சென்னை ஐஐடி-யின் நிறுவன பேராசிரியரான பேரா. ஆர்.கிருஷ்ணகுமார் அவர்களால் இந்த ஆய்வு கருத்துரு ஆக்கம் செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.

ஐஐடி-யின் பகுதிநேர ஆசிரியரும், மியாட் சென்னை மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை இயக்குநருமான டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறுகையில், "வீக்கம் மற்றும் சைட்டோகைன் ஸ்டார்ம் (Cytokine storm) ஆகியவை கோவிட் நோய்த்தொற்றின் கொடிய விளைவுகள் என்பதை அறிந்து, ஸ்டெராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்தான தொடர்பான ஆய்வை மேற்கொள்வது என முடிவு செய்தோம். 

கொரோனா வைரசுக்கு எதிராக வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கை இருப்பதை அறிவியல்பூர்வமான சான்றுருள் வலுவாக எடுத்துரைக்கின்றன. இன்டோமெதசின் பாதுகாப்பான, நன்கு புரிந்துகொள்ளப்பட்ட மருந்தாகும் கடந்த 30 ஆண்டுகளாக இந்த மருந்தை எனது துறையில் பயன்படுத்தி வருகிறேன்." என்றார்.

பின்னர் ஆய்வுக் கண்டுபிடிப்புகளை எடுத்துரைத்த பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார் தெரிவித்ததாவது,

 "அனுமதிக்கப்பட்ட 210 மொத்த நோயாளிகளில் 107 பேர் பாராசிட்டமால் மற்றும் நிலையான சிகிச்சை முறையுடன் கூடிய கட்டுப்பாட்டுக் குழுவிற்கு ஒதுக்கப்பட்டனர். 

மீதமுள்ள 103 நோயாளிகளுக்கு நிலையான சிகிச்சையுடன் இன்டோமெதசின் செலுத்தப்பட்டது. இருமல், சளி, காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டல் போன்ற அறிகுறிகளுக்காக நோயாளிகள் தினந்தோறும் கண்காணிக்கப்பட்டு வந்தனர் இன்டோமெதசின் செலுத்தப்பட்ட 103 நோயாளிகளில் எவருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை உருவாகவில்லை அதே நேரத்தில், கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்த 109 பேரில் 20 பேருக்கு 93 விழுக்காடுக்கும் குறைவான ஆக்சிஜன் செறிவூட்டல் நிலை ஏற்பட்டது. 

இன்டோமெதசின் குழுவில் இருந்த நோயாளிகள் மூன்று அல்லது நான்கு நாட்களில் அனைத்து அறிகுறிகளில் இருந்தும் மீண்டு விட்டனர்.

கட்டுப்பாட்டுக் குழுவிற்கோ இருமடங்கு நேரம் பிடித்தது. கல்லீரல், சிறுநீரக செயல்பாடு சோதனைகளின் போது எந்த எதிர்மறையான எதிர்வினையையும் காட்டவில்லை.

பதினான்காம் நாள் தொடர் கவனிப்பின்போது, கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்த நோயாளிகளில் பாதிப் பேருக்கு பல்வேறு அசௌகரியங்கள் இருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் இன்டோமெதசின் நோயாளிகளைப் பொருத்தவரை சோர்வாக இருப்பதாக மட்டுமே தெரிவித்தனர்." என்றார்.

இந்த ஆய்வுப் பணி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி "இன்டோமெதசின் பரிசோதனை குறித்த முடிவுகளை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன், பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார் மற்றும் அவர்களின் குழுவினரைப் பாராட்டுகிறேன். இனி எப்போதாவது கோவிட்-19 அலை ஏற்படும் பட்சத்தில் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | பைக்கை திருட வந்த வாலிபர் கிணற்றில் விழுந்து பலி!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News