சென்னை காமராஜர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த கப்பலில் பொறியாளராக பணியாற்றிய இந்தோனேஷியாவைச் சேர்ந்த முகமதுஸெனல் அரிஃபின் என்பவர், கப்பல் பணியாளரால் கடந்த 2021 செப்டம்பரில் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.
காமராஜர் துறைமுகம் அமைந்துள்ள எண்ணூரில் மருத்துவமனை வசதி இல்லாததால் முன் அனுமதியில்லாமல் சட்டத்துக்கு விரோதமாக கப்பலை விட்டு வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் அரிஃபின்.
சிகிச்சைக்குப் பின் கப்பலுக்கு திரும்ப முயற்சித்த அவரை உள்ளூர் போலீசார் கைது செய்து பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்கள் முகாமில் அடைத்தனர்.
முகாமில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அரிஃபின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாக்கப்பட்ட நிலையில் வாழ்வா - சாவா என்ற சூழலில் பின் விளைவுகளை அறியாமல் உயிரை காப்பாற்றுவதற்காக சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டுள்ளார் எனக் கூறி அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | எஸ்.ஜே. சூர்யா-வுக்கு இந்த கோடிகள் வரி பாக்கியா ? எச்சரித்த நீதிமன்றம்!
உடனடியாக அவரது பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைத்து, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR