கருங்குளம்: சுப்ரீம் கோர்ட் தடையால் 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி விளையாட்டு நடக்கவில்லை. இந்த ஆண்டும் சுப்ரீம் கோர்ட் தடையை நீக்க மறுத்ததால் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
ஜனவரி 16-ம் தேதி அலங்காநல்லூரில் போராட்டம் நடைபெற்றது. விடிய விடிய போராட்டம் நடத்தியவர்கள் அதிகாலையில் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து சென்னை மெரீனா தொடங்கி தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் வெடித்தது. மாணவர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் ஒரு வாரமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றியது.
ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக மாற்றியதால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் கருங்குளம் கிராமத்தில் காளைகளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. கருங்குளம் கிராமத்தில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு வீடியோ:-
#WATCH: Bull-taming sport #jallikattu begins in Karungulam village of Tamil Nadu pic.twitter.com/DNSP5DP97R
— ANI (@ANI_news) January 29, 2017