முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பற்றிருந்தார். கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் மரணமடைந்தார்.
பின்னர் எம்.ஜி.ஆரின் சமாதிக்கு பின்புறம் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல கேள்விகளுக்கு எழுந்துள்ளது. அதற்கு இதுவரை பதில் கிடைக்கவே இல்லை. இது தொடர்பாக நடிகை கவுதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இதுபோல ஜெயலலிதாவின் இரத்த சொந்தங்களும், அவரது தொண்டர்களும், தமிழக மக்களும் கேள்வி எழுப்பி வருகின்றன.
ஜெயலலிதா இறப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி அமைப்பு சார்பில் வழக்கு தொடரபட்டு உள்ளது ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி மனுவில் கோரிக்கை விடபட்டு உள்ளது.