சென்னையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் மேம்பாலம் பணிகள் முடிந்தன. அங்கு கடந்த ஆண்டு முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பாதை பணி கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சின்ன மலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து சின்னமலை-விமான நிலையம் இடையே நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குகிறது. இதற்கான விழா தலைமைச்செயலகத்திலும், விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்திலும் நாளை காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.
தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையைத் தொடங்கி வைப்பார்.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு, மத்திய சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் விழாவுக்கு முன்னிலை வகிப்பார்கள்.
மெட்ரோ ரெயிலுக்கான கட்டணம்:-
முதல் 2 கி.மீ - ரூ.10
2 முதல் 4 கி.மீ - ரூ.20
4 முதல் 6 கி.மீ. - ரூ.30
6 முதல் 8 கி.மீ - ரூ.40
8 முதல் 10 கி.மீ - ரூ.5௦
10 முதல் 15 கி.மீ- ரூ.60.
Metro Rail's elevated stretch from Little Mount to Airport will be inaugurated tomorrow by Puratchi Thalaivi Amma. pic.twitter.com/5bmwRuIqzY
— AIADMK (@AIADMKOfficial) September 20, 2016