முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி சென்னை உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பிரிவு களின் சிறப்பு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அப்பல்லோ மருத்துவ குழுவினர் முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இங்கிலாந்து நாட்டில் இருந்து பிரபல டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே கடந்த 1-ம் தேதி சென்னை வந்தார். லண்டனில் உள்ள பிரிட்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்தவர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவர் கேட்டறிந்தார். பிறகு அவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை ஆய்வு செய்து சிகிச்சை அளித்தார். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களுடன் கலந்து ஆலோசித்து அவர் சிகிச்சை முறைகளை தொடரச் செய்தனர்.
கடந்த 5-ம் தேதி டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்தனர். அவர்கள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, டாக்டர் ஜான் ரிச்சர்டு பீலேவுடன் இணைந்து சிகிச்சை அளித்தனர்.
தற்போது லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மீண்டும் இன்று இரவு லண்டனில் இருந்து சென்னை வருகிறார். சென்னை வரும் அவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை ஆய்வு செய்து சிகிச்சை அளிபார் என தெரிகிறது. அவர் குறைந்தது ஒரு வாரம் சென்னையில் தங்கி சிகிச்சை அளிப்பார் என தெரிகிறது.