தூத்துக்குடி ஸ்டெர்லை வழக்கு; நீதிபதி சசிதரன் திடீர் விலகல்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை அமர்வில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் திடீரென வழக்கில் இருந்து விலகியுள்ளார்!

Last Updated : Jun 11, 2019, 12:00 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லை வழக்கு; நீதிபதி சசிதரன் திடீர் விலகல்? title=

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை அமர்வில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் திடீரென வழக்கில் இருந்து விலகியுள்ளார்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலைக்கு கடந்தாண்டு சீல் வைக்கப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் பட்டியலிட்டிருந்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகுவதாக அறிவித்துள்ளார். ஸ்டெர்லைட் வழக்கில் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு பிறப்பித்திருப்பதால் தற்போது இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 
மேலும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றவும் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சசிதரன் பரிந்துரை செய்துள்ளார்.

ஸ்டெர்லைட் வழக்கில் இருந்து நீதிபதி சசிதரன் விலகியதால், இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடுமாறு தலைமை  நீதிபதியிடம் வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலினை செய்து பிற்பகலுக்கு மேல் முடிவெடுக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Trending News