சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட் மூத்த நீதிபதியான வி.கே.தகில் ரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்திரா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக செல்வதால், தகில் ரமணி, புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தேர்ச்சி பெற்ற நீதிபதி வி.கே.தகில்ரமணி, மும்பை கீழ் நீதிமன்றங்களில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டார்.
1982-ம் ஆண்டு மும்பை மற்றும் கோவாவில் கீழ் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2001-ம் ஆண்டு மும்பை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.