பொதுவாகவே வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்கள் மீன், கோழி, ஆடு போன்ற இறைச்சி உணவுகளை உண்பதற்காக அதிகளவில் இறைச்சிகளை கடைகளை நாடியும், மீன் சந்தைகளிலும் அதிகளவில் குவிவர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் பென்னேரிக்கரை மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்களின் கூட்டமானது அலைமோதி காணப்படும்.ஆனால் புரட்டாசி மாதம் இன்று பிறந்ததையொட்டி அச்சந்தையே அதிகளவு பொதுமக்கள் வரத்தின்றி வெறிச்சோடி களையிழந்து காணப்பட்டது.
மேலும் படிக்க | ஜெயிலர் வீட்டிற்கு தீ - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்
மேலும் இன்று மீன் வரத்தானது குறைந்துள்ளதால் மீன்கள் விலையானது கடும் ஏற்றத்தை கண்டுள்ளது. ஒரு கிலோ சங்கரா மீன் ரூ 220க்கும், வன்ஜிரம்-ரூ500க்கும், வவ்வாள்- 500 ரூபாய்க்கும், சீலா- 200 ரூபாய் - 250 ரூபாய்க்கும், கில்சை- 120 ரூபாய்க்கும், தொடுவா 350 ரூபாய்க்கும், பெரிய சுறா- 400 ரூபாய்க்கும், வெறால்- 200 ரூபாய் - 300 ரூபாய்க்கும், கணவா- 300 ரூபாய்க்கும், நெத்திலி- 250 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
புரட்டாசி மாதம் என்பதால் மீன்களின் விலை குறைவாக இருக்கும் என எண்ணி வந்த அசைவ பிரியர்கள் புலம்பியபடியே மீன்களை வாங்கி செல்லும் நிலையானது ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் காசிமேடு மீன் சந்தையில் பொதுவாக மற்ற நாட்களை காட்டிலும் விடுமுறை தினமான இன்று கூட்டம் அதிகரித்து கானப்படும். அசைவ பிரியர்கள் பெரும்பாலானோர் ஒரே நேரத்தில் திரண்டு தங்களுக்கு பிடித்தமான மீன்களை வாங்கிச்செல்வர். ஆனால் இன்று புரட்டாசி மாதப்பிறப்பை முன்னிட்டு இந்துக்களில் பெரும்பாலானோரும், பெருமாளை வழிபடுவோரும் இம்மாதம் மட்டும் அசைவம் உட்கொள்ளமாட்டார்கள்.
இதன் காரணமாக காசிமேடு மீன்சந்தையில் அசைவபிரியர்கள் கூட்டம் குறைந்து கானப்பட்டது. மீன்களின் விலை குறைவாக இருந்தும் கூட, மந்தமான நிலையிலேயே வியாபாரம் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | செவிலியரின் முகத்தை கடித்து குதறிய நபர்... விருதுநகரில் பரபரப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata