தமிழகத்திற்கு 33 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு 33.19 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2021, 03:56 PM IST
தமிழகத்திற்கு 33 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு title=

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டமானது மத்திய நீர்வள ஆணையர் ஹல்தார் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். 

இந்நிலையில் இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு (Karnataka Government) மேகதாதுவில் அணை கட்டுவது குறித்த பிரச்னையை எழுப்பியது. அப்போது மேகதாதுவில் (Mekedatu) அணைக் கட்ட அனுமதி பெறப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்ததற்கு தமிழக அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் மேகதாது மட்டுமல்லாது எங்கு அணை கட்டினாலும் தமிழக அரசின் அனுமதி தேவை என்றும் அவசர தேவைக்காக திறந்துவிடும் தண்ணீரை தமிழகத்திற்கான நீராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

ALSO READ | TN Lockdown: அடுத்த ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்?

மேலும்  வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பகட்ட பணியையும் மேற்கொள்ள கூடாது என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் காவிரியில் (Cauvery River) உரிய நீரை கர்நாடகா வழங்கவில்லை என காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் -9.19 டிஎம்சி, ஜூலை -24 டிஎம்சி என மொத்தம் 33.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ALSO READ | Black Fungus: கருப்பு பூஞ்சை சிறப்பு நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News