Tamil Nadu Weather: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நவம்பர் 11-ஆம் தேதி மாலைக்குள் கரையைக் கடக்கும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது.
இந்த வானிலை இன்று (நவம்பர் 11) மாலைக்குள் புதுச்சேரிக்கு வடக்கே காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று (புதன்கிழமை) இடைவிடாமல் லேசானது முதல் மிதமானது வரை பெய்த மழை மாலையில் வேகம் பிடித்தது.அதன்பிறகு தொடர்ந்து விடிய விடிய மழை பெய்தது.
இன்றும் (வியாழக்கிழமை) எதிர்பார்க்கப்படும் கடுமையான மழைக்கு முன்னதாக IMD சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வெள்ள மீட்புப் பணிகளை தொடர்ந்து தமிழக அரசு கவனித்து வருகிறது.