எந்த மாநிலங்களில் எப்போது தேர்தல்? - காஷ்மீர் முதல் தமிழகம் வரை... முழு விவரம்!

Lok Sabha Election 2024, 7 Phase Wise Details: எந்தெந்த மாநிலங்களுக்கு எந்தெந்த கட்டங்களில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பதை இதில் முழுமையாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 16, 2024, 07:57 PM IST
  • 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
  • மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு
  • ஜூன் 4ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
எந்த மாநிலங்களில் எப்போது தேர்தல்? - காஷ்மீர் முதல் தமிழகம் வரை... முழு விவரம்! title=

Lok Sabha Election Dates 2024, 7 Phase Wise Details: 18ஆவது மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப். 19ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

இத்துடன் 4 மாநில சட்டப்பேரவை தேர்தலும், பல மாநிலங்களின் 26 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல்களும் நடைபெறுகிறது. இந்த அத்தனை தேர்தல் முடிவுகளும் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த 3 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல்

22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. மேலும், பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்த 7 கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறும். கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இரண்டு கட்டங்களாகவும், சத்தீஸ்கர் மற்றும் அசாம் மாநிலங்களில் மூன்று கட்டங்களாகவும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

ஒடிசா , மத்திய பிரசேதம், ஜார்க்கண்ட் ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாகவும், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் 5 கட்டங்களாகவும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், எந்தெந்த மாநிலங்களுக்கு எந்தெந்த கட்டங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பதை இதில் காணலாம்.

மேலும் படிக்க | முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் தேர்தல்... பாஜகவுக்கு சாதகமா? - சந்தேகத்தை கிளப்பும் தலைவர்கள்!

முதல் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 19

[21 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் - 102 தொகுதிகள்] - அருணாச்சல பிரதேசேம், அசாம் (முதல் கட்டம்), பீகார் (முதல் கட்டம்), சத்தீஸ்கர் (முதல் கட்டம்), மத்திய பிரதேசம் (முதல் கட்டம்), மகாராஷ்டிரா (முதல் கட்டம்), மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான் (முதல் கட்டம்), சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா (முதல் கட்டம்), உத்தர பிரதேசம் (முதல் கட்டம்), உத்தரகாண்ட், மேற்கு வங்கம் (முதல் கட்டம்), அந்தமாண் மற்றும் நிகோபார் தீவுகள், ஜம்மு காஷ்மீர் (முதல் கட்டம்), லட்சத்தீவு, புதுச்சேரி 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 26

[13 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் - 89 தொகுதிகள்] - அசாம் (இரண்டாம் கட்டம்), பீகார் (இரண்டாம் கட்டம்), சத்தீஸ்கர் (இரண்டாம் கட்டம்), கர்நாடகா (முதல் கட்டம்), கேரளா, மத்திய பிரதேசம் (இரண்டாம் கட்டம்), மகாராஷ்டிரா (இரண்டாம் கட்டம்), ராஜஸ்தான் (இரண்டாம் கட்டம்), திரிபுரா (இரண்டாம் கட்டம்), உத்தர பிரதேசம் (இரண்டாம் கட்டம்), மேற்கு வங்கம் (இரண்டாம் கட்டம்), ஜம்மு காஷ்மீர் (இரண்டாம் கட்டம்)

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு - மே 7

[12 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் - 94 தொகுதிகள்] - அசாம் (மூன்றாம் கட்டம்), பீகார் (மூன்றாம் கட்டம்), சத்தீஸ்கர் (மூன்றாம் கட்டம்), கோவை, குஜராத், கர்நாடகா (இரண்டாவது கட்டம்), மத்திய பிரதேசம் (மூன்றாம் கட்டம்), மகாராஷ்டிரா (மூன்றாம் கட்டம்), உத்தர பிரதேசம் (மூன்றாம் கட்டம்), மேற்கு வங்கம் (மூன்றாம் கட்டம்), தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, ஜம்மு காஷ்மீர்

மேலும் படிக்க | 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தேதிகள் அறிவிப்பு - முழு விவரம்

நான்காம் கட்ட வாக்குப்பதிவு - மே 13

[10 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் - 96 தொகுதிகள்] - ஆந்திரா, பீகார் (நான்காவது கட்டம்), ஜார்க்கண்ட் (முதல் கட்டம்), மத்திய பிரதேசம் (நான்காவது கட்டம்), மகாராஷ்டிரா (நான்காவது கட்டம்), ஒடிசா (முதல் கட்டம்), தெலங்கானா (முதல் கட்டம்), உத்தர பிரதேசம் (நான்காவது கட்டம்), மேற்கு வங்கம் (நான்காவது கட்டம்), ஜம்மு காஷ்மீர் (நான்காவது கட்டம்)

ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு - மே 20

[8 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் - 49 தொகுதிகள்] பீகார் (ஐந்தாவது கட்டம்), ஜார்க்கண்ட் (இரண்டாவது கட்டம்), மகாராஷ்டிரா (ஐந்தாவது கட்டம்), ஒடிசா, (இரண்டாவது கட்டம்), உத்தர பிரதேசம் (ஐந்தாவது கட்டம்), மேற்கு வங்கம் (ஐந்தாவது கட்டம்), ஜம்மு காஷ்மீர் (ஐந்தாவது கட்டம்), லடாக்

ஆறாவது கட்ட வாக்குப்பதிவு - மே 25 

[7 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் - 57 தொகுதிகள்] - பீகார் (ஆறாவது கட்டம்), ஹரியானா, ஜார்க்கண்ட் (மூன்றாவது கட்டம்), ஒடிசா (மூன்றாவது கட்டம்), உத்தர பிரேதசம் (ஆறாவது கட்டம்), மேற்கு வங்கம் (ஆறாவது கட்டம்), டெல்லி

ஏழாவது கட்ட வாக்குப்பதிவு - ஜூன் 1 

[8 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் - 57 தொகுதிகள்] - பீகார் (ஏழாவது கட்டம்), ஹிமாச்சல் பிரதேசம், ஜார்க்கண்ட் (நான்காவது கட்டம்), ஒடிசா (நான்காவது கட்டம்), பஞ்சாப், உத்தர பிரதேசம் (ஏழாவது கட்டம்), மேற்கு வங்கம் (ஏழாவது கட்டம்), சண்டிகர்

மேலும் படிக்க | லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்! 6 மணிக்கு மேல் பணம் எடுத்துச் செல்லக்கூடாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News