தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி.. டார்ச் அடித்து ரயிலை நிறுத்திய வயதான தம்பதி!

எஸ். வளைவு பகுதில் லாரி விபத்துக்கு உள்ளான போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து ரயிலை நிறுத்தினர்.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Feb 26, 2024, 09:40 AM IST
  • தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து.
  • ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு.
  • தென்காசி அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி.. டார்ச் அடித்து ரயிலை நிறுத்திய வயதான தம்பதி! title=

தமிழக கேரள எல்லையான புளியரை கோட்டை வாசல் பகுதியில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் லாரி டிரைவர் பலியானார். இதனால் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கேரள மாநிலத்தில் இருந்து பிளைவுட் ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி நோக்கி இன்று அதிகாலையில் லாரி தென்காசி மாவட்டம் புளியரை கோட்டைவாசல் பகுதியில் உள்ள எஸ். வளைவு பகுதியில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சுமார் 100 அடி பள்ளத்தில் இருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. இதில் லாரி முற்றிலும் சேதம் அடைந்ததோடு லாரி டிரைவர் முக்கூடல் பகுதியைச் சார்ந்த மணிகண்டன் என்பவரது உடல் 3 துண்டுகளாக சிதைந்தது.

மேலும் படிக்க | மோடியை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை - அண்ணாமலை பேச்சு!

இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கேரள மாநிலம் புனலூர் பகவதி அம்மன் கோவில் திருவிழா சிறப்பு ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியைச் சார்ந்த சண்முகையா சுப்பிரமணியன், வடக்கத்தி அம்மாள் ஆகியோர் டார்ச் லைட்டை அடித்து ரயில் டிரைவருக்கு புரியும் வகையில் சிக்னல் கொடுத்தனர். அதனைப் பார்த்து ஏதோ அசம்பாவிதம் நடைபெற்று உள்ளது என்பதை புரிந்து கொண்ட ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

tenaksi

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக ரயில்வே துறை மற்றும் காவல்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த ரயில்வே துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் தண்டவாளத்தில் கிடந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியரை போலீசார் விபத்தில் சிக்கி உருக்குலைந்த நிலையில்  லாரிக்குள் மூன்று துண்டுகளாக கிடந்த லாரி டிரைவர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்த செங்கோட்டை ரயில் நிலைய அதிகாரிகள் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் நோக்கி வந்து கொண்டிருந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர்.

இந்த மீட்பு பணிகள் சுமார் 4 மணிநேரம் நீடித்தது. அதன்பிறகு புனலூர் பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்பு ரயில் மற்றும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் அந்த ரயிலில் வந்த பயணிகள்  சிரமம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. எஸ். வளைவு பகுதில் சென்ற லாரி விபத்துக்கு உள்ளான போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து வந்ததோடு அப்போது அந்த வழியாக வந்த ரயிலை தடுத்து நிறுத்தி பெரும் விபத்து நடைபெறாமல் தடுத்த அந்த பகுதியை சேர்ந்த சண்முகையா சுப்பிரமணியன், வடக்கத்தி அம்மாள் ஆகியோருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்க | கோவை ஷாக்: குடும்பமே தற்கொலை! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News