Independent Candidate Manifesto: மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் துலாம் சரவணன், அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாக மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். தமிழ் நாட்டில் நடைபெற்ற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தின் முக்கியக் கட்சிகளான அதிமுக (AIADMK) மற்றும் திமுக (DMK) கட்சிகளை மிஞ்சும் வகையில், சுயேட்சை வேட்பாளரின் வாக்குறுதிகள் பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தினாலும், சிந்திக்கவும் வைத்திருக்கிறது. ஏனென்றால், இதுபோன்ற வாக்குறுதிகளும் ஒருவரால் கொடுக்கமுடியுமா என்று, தமிழக அரசியல் வரலாற்றில், இப்படி ஒரு வாக்குறுதிகளை யாரவது கொடுத்து இருப்பார்கள் என்றால், இல்லை என்பதே பதில்.
மதுரை தெற்கு (Madurai South) சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான துலாம் சரவணனின் வாக்குறுதி பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில், "நீங்கள் எனக்கு அளிக்கும் வாக்குகள், சட்டமன்றத்தில் உங்களுக்காக ஒலிக்கும் என் வார்த்தைகள்", "நமது நேர்மையின் சின்னம் குப்பைத்தொட்டி" எனத் தெரிவித்துள்ளார்.
ALSO READ | அதிமுக என்றால் ''ISI'', திமுக என்றால் டூப்ளிகேட் '': எடப்பாடி பழனிசாமி
தமிழக முழுவதும் தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சி தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மொத்த 234 சட்டமன்ற தொகுதிக்கும் நேரடியான தேர்தலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்குக்கான தேர்தல் பிரச்சாரம் (Election Campaign) வருகிற 4 ஆம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. ஒருநாள் கழித்து வாக்குபதிவு நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல்களில் (Assembly Elections 2021) பதிவாகும் வாக்கு எண்ணிக்கை (Elections Results 2021) மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR