மெரினா: திரும்பி செல்லுங்கள் - காவல்துறை வேண்டுகோள்!

Last Updated : Jan 23, 2017, 11:05 AM IST
மெரினா: திரும்பி செல்லுங்கள் - காவல்துறை வேண்டுகோள்! title=

மெரினா கடற்கரையில் இருந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது:-

அமைதியான முறையில் போராடினீர்கள். உங்களுடைய குறிக்கோள் நிறைவேற்று பட்டுள்ளது. எனவே எப்படி  அமைதியான முறையில் போராடினீர்களோ, அதே முறையில் கலைந்து செல்லுங்கள். சட்டம் ஒழுங்கை மதித்து இதுவரை அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளித்தீர்கள். தயவு செய்து கலைந்து செல்லுங்கள் என்று காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளனர்.

நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களான ராஜசேகர், கார்த்திகேய சிவசேனாதிபதி, அம்பலத்தரசு, ஹிப்காப் ஆதி ஆகியோர் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News