எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான ''கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு'' என்ற திரைப்பட தொடக்க விழாவில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கலந்து கொண்டனர்.
கடந்த 29-ஆம் தேதி ரசிகர்களை சந்தித்து ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும். சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த அரசியல் வருகைக்கு நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதற்காக நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் பிரவேச அறிவிப்புகளுக்கு இடையில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான ''கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு'' என்ற திரைப்பட தொடக்க விழாவில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கலந்து கொண்டனர்.
இன்று இப்படத்தின் துவக்க விழா சென்னை அடையாறில் நடந்தது. இந்த துவக்க விழாவில், எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள், கழக தொண்டர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
எம்.அருள் மூர்த்தி இயக்கத்தில், இமான் இசையமைப்பில், இப்படம் உருவாகயிருக்கிறது. பிரபுதேவா மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோர் இந்த படத்தினை தயாரிக்கிறார்கள். அடுத்த வருடம் இதே நாளில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
Chennai: Rajinikanth & Kamal Haasan at the launch of late Tamil Nadu CM MG Ramachandran's (MGR) motion capture film Kizhakku Africavil Raju on his (MGR) 101st birth anniversary pic.twitter.com/L4dVnpK25B
— ANI (@ANI) January 17, 2018