பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன; உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!
பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாலும், பதப்படுத்தும் செலவு உள்ளிட்டவை உயர்ந்ததாலும் பால் விற்பனை விலை விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் படி அனைத்து வகையான ஆவின் பாலும் லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்படுகிறது. கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக் ரூ.28-ல் இருந்து ரூ32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன; உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; சட்டசபையில் அறிவித்தபடி பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. எனவே, உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பால் கொள்முதல் விலை அதிகம்.
மேலும், மழை அளவை பொறுத்துதான் மேட்டூர் அணையில் நீர் திறப்பு உயர்த்தப்படும் என தெரிவித்தார்.