தமிழகத்தின் திருச்சியில் வரும் ஜனவரி 20-ஆம் நாள், தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைக்கின்றார்!
தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை திருச்சியில் வரும் ஜனவரி 20-ஆம் நாள் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துவக்க விழாவில் புதிய முதலீடுகள், புதிய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ராணுவ தொழில் வழித்தட கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசு ₹20 கோடி ஒதுக்குகிறது.
அதேபோல கோயம்புத்தூரில் ராணுவ தளவாட கண்டுபிடிப்புகளுக்கான கேந்திரமும் அன்றே தொடங்கப்படும் என்று ராணுவ கொள்முதல் பிரிவு செயலாளர் அஜய்குமார் தெரிவித்துள்ளார்.