Ews ஒதுக்கீடு பின்பற்றப்படாது; அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு

பேராசிரியர் பணி நியமனங்களில் EWS ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது என அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 11, 2022, 05:22 PM IST
  • பேராசிரியர்கள் பணி நியமனம்
  • உயர்ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு
  • பின்பற்றப்படாது என அமைச்சர் அறிவிப்பு
Ews ஒதுக்கீடு பின்பற்றப்படாது; அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு  title=

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநிலம் முழுவதும் உள்ள இணை இயக்குனர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, "உயர் கல்வி துறையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், மாணவர் சேர்க்கை ஆசிரியர் பணியிடங்கள் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பொறியியல் மாணவர் சேர்க்கையில்  கடந்த ஆண்டை விட 10000 மாணவர்கள் கூடுதலாக இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்.

மேலும் படிக்க | Viral News: கையில் சுற்றிய நாகப்பாம்பை கடித்து குதறி கொன்ற 8 வயது சிறுவன்!

அதேபோல், பிளஸ் 2 துணை தேர்வு முடிகள் தற்போது வெளியாகி உள்ளதால், 18 நவம்பர் வரை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடத்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளது. எந்த கல்லூரிகளிலும் காலியிடம் இல்லாத வகையில் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிட்டிருக்கிறது அரசு. பி. எச்.டி.படிப்பு 20 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் துவங்கப்பட்டு உள்ளது. சென்னை மாநில கல்லூரியில் செவிதிறன் குறைபாடு உள்ளவர்களுக்கு எம்.காம் முதுகலை படிப்பு தற்போது துவங்கப்பட்டுள்ளது. 

கடந்த அரசால் அறிவிக்கப்பட்டு காட்டபட்டாமல் விடப்பட்ட 13 கல்லூரிகளில் 8 கல்லூரிகளுக்கான கட்டிடப்பணி துவங்கப்பட்டு உள்ளது. அதேபோல் திமுக அரசு அறிவித்த 20 கல்லூரிகளில் 9 கல்லூரிக்களுக்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. புதிய கல்லூரிகள் உருவாவதால் காலி இடங்கள் இருப்பதால் ,1895 காலியிடங்களுக்கான கௌரவ விரிவுரையாளர்கள் நேர்முக தேர்வு மூலம் உடனடியாக நியமிக்கப்பட உள்ளனர்.

Ews ஒதுக்கீடு தமிழக அரசு நாளை அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்ட உள்ளது . திமுக சார்பில் மறுசீராய்வு செய்யப்பட உள்ளது. இப்போது நியமனம் செய்யும் பணிகளில் EWS ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது. ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 16 ம் தேதி அரசு கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும்" எனவும் கூறினார்.

மேலும் படிக்க | Viral Video: ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் மலைப்பாம்பும் ராஜநாகமும்! மனம் பதற வைக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News