சென்னையில் மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தற்போது, பிரதமர் மோடி மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். 

Last Updated : Feb 24, 2018, 06:57 PM IST
சென்னையில் மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி! title=

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும், மானிய விலை ஸ்கூட்டர் வழங்குவதற்காகவும் பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை புரிந்துள்ளார்.

சென்னை வந்த பிரதமர் மோடியை பொன்.ராதாகிருஷ்ணன், மைத்ரேயன் எம்.பி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எம்.பி.நவநீதகிருஷ்ணன் வரவேற்றனர்.

அதை தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர், மானிய விலை ஸ்கூட்டர் வழங்குவதற்காகவும் பிரதமர் மோடி தற்போது, விழா மேடைக்கு சென்றுள்ளார்.

கலைவாணர் அரங்கத்தில் மானிய ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் உரையாற்றினார்.

அப்போது முதல்வர் பழனிசாமி கூறுகையில்:- மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தந்ததற்கும், தமிழ் மொழியை பாராட்டி பேசியதற்கும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். 

அதைதொடர்ந்து, பிரதமர் மோடி மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

சுகாதாரம், விவசாயிகள் நலன் ஆகியவற்றை இலக்காக வைத்து மத்திய அரசு செயல்படுகிறது, சாமானியர்களுக்கு அதிகாரமளித்தலை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன என்று தெரிவித்தார்.

இதேபோல் நாளை புதுச்சேரி ஆரோவிலில் நடைபெறும் நிகழ்விலும் பங்கேற்கிறார். இதற்கான முழுப்பயண விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

அதையடுத்து, அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தியானம் செய்கிறார். பின்னர் ஆரோவில் சர்வதேச நகர் பொன்விழா நிகழ்ச்சி மற்றும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மாலையில் விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

Trending News