புதிய தனிநாட்டை உருவாக்கிய சர்ச்சை சாமியார்!

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி உள்ளார் நித்யானந்தா.

Updated: Dec 4, 2019, 11:00 AM IST
புதிய தனிநாட்டை உருவாக்கிய சர்ச்சை சாமியார்!

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி உள்ளார் நித்யானந்தா.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நித்யானந்தாவுக்கு பல்வேறு கிளைகள் உள்ளது. 

இந்நிலையில், தற்போது  நித்யானந்தா வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார். மேலும் இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக அந்த வீடியோவில் நித்யானந்தா அறிவித்துள்ளார்.

கைலாசா இந்து நாட்டின் மொத்த மக்கள் தொகை 10 கோடி பேர் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த நாட்டுக்கென்று பாஸ்போர்ட், மொழி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு அமைச்சரவையையும் உருவாக்கி உள்ளார்.