கரையை நோக்கி நகர்ந்து வரும் Cyclone Nivar - பொதுமக்களுக்கு TN SDMA வேண்டுகோள்

வரும் 25 ஆம் தேதி பிற்பகல் நிவர் புயல் கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை எச்சரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2020, 07:24 PM IST
  • வரும் 25 ஆம் தேதி பிற்பகல் நிவர் புயல் கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
  • இது காரைக்கால் - மாமல்லபுரம் (Karaikal and Mahabalipuram) இடையே கரையை கடக்கும்.
  • அவசர காலம் மற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்து பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
  • வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும்.
  • புயல்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும்.
கரையை நோக்கி நகர்ந்து வரும் Cyclone Nivar - பொதுமக்களுக்கு TN SDMA வேண்டுகோள் title=

தமிழகத்தில் நிவர் புயல்: வங்கக் கடலில் உருவாகும்  "நிவர்" புயல் தமிழக கரையை (Tamil Nadu Coast) நோக்கி நகர்ந்து வருகிறது. இது காரைக்கால் - மாமல்லபுரம் (Karaikal and Mahabalipuram) இடையே வரும் 25 ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை பொதுமக்களிடம் சில வேண்டுகோளை வைத்துள்ளது. 

அடையாள ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்: 
தமிழகத்தை நோக்கி நிவர் புயல் (Cyclone Nivar) வரும் நிலையில் ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும் இதுமட்டுமல்லாது அடையாள ஆவணங்களான ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகங்கள், கல்விச் சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை நீர் படாத வகையில் பிளாஸ்டிக் உரைகளைக் கொண்டு பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும்.

 

குடிக்க உகந்த நல்ல நீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்: 
புயல்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுர்யமாக செயல்பட வேண்டியது அவசியம்.  அதனால் குடிக்க உகந்த நல்ல நீரை (போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ALSO READ |  தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: வருகிறது நிவர் புயல், அதிகன மழைக்கான வாய்ப்பு

பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்: 
அவசர காலம் மற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்து பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும். உறுதியான கயிறுகள், காற்றை சமாளித்து எரியும் அரிக்கேன் விளக்குகள் வைத்திருக்க வேண்டும். மேலும் பாட்டரியில் இயங்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள்,

பேரிச்சை, திராட்சை போன்ற உலர்ந்த பழ வகைகள், வறுத்த வேர்க்கடலை மற்றும் மூக்குக் கடலை, மெழுகு வர்த்தி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

புயல் வருவதற்கு முன்பு, வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகளை பழுது பார்த்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும்.

ALSO READ |  தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: வருகிறது நிவர் புயல், அதிகன மழைக்கான வாய்ப்பு

வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: 
புயல் கரையை கடக்கும்போது, குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம்  அறிவிக்கப்படும்  வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டு, அதன்படி செயல்படலாம். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News