போக்குவரத்து ஊழியர்கள் நியமனத்திற்கும் இனி தனித் தேர்வு?

3 மாதங்களில் போக்குவரத்து ஊழியர்கள் நியமனத்துக்கு தனித் தேர்வுக் கொள்கை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!

Last Updated : Jul 13, 2019, 04:18 PM IST
போக்குவரத்து ஊழியர்கள் நியமனத்திற்கும் இனி தனித் தேர்வு? title=

3 மாதங்களில் போக்குவரத்து ஊழியர்கள் நியமனத்துக்கு தனித் தேர்வுக் கொள்கை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!

ITI, Fitter படிப்பை முடித்துவிட்டு போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பெற்றுள்ள திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி கோவைசாமி என்பவர் "பயிற்சிப் பெற்றும் தனக்கு பணி வழங்கவில்லை" எனத் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு பிரப்பித்துள்ளது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 22 ஆண்டுகள் ஆகியும் தனக்கு இதுவரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து எந்த ஒரு கடிதமும் வரவில்லை என்பதால் 248 நாட்கள் பயிற்சி பெற்ற தனக்கு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்கும்படி மனு அளித்ததை பரிசீலிக்கும் வேண்டும் என்று மனுதாரர் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, போக்குவரத்துக் கழகங்களில் உரிய முறையில் விளம்பரம் கொடுக்காமல் பணி நியமனங்களை மேற்கொள்வதாக குறிப்பிட்டார். மேலும் தேர்வு நடைமுறைகள் ஏதும் இல்லை என்றுக் கூறி, அரசு பணியாளர் தேர்வாணையம் அல்லது வேறு அமைப்பின் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில், போக்குவரத்து பணிகளுக்கு தகுதிகள் நிர்ணயித்து தேர்வுகள் மேற்கொள்வதாகவும் பணியாளர்களின் கல்வித் தகுதி, வயது, அனுபவம் உள்ளிட்ட தகுதிகள் பரிசீலித்து செயல் முறைத் தேர்வு நடத்திய பிறகே பணிக்கு தேர்வு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆஷா ஆகியோர் அமர்வு முன்பு அரசு பணி நியமனத்தில் வெளிப்படைத்தனமை பின்பற்றப்பட வேண்டும் என்றும் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டு தகுதியுடைய அனைவரையும் போட்டியிட அனுமதித்து பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிரப்பித்தனர். 

போக்குவரத்துத் துறையில் பணியாளர்கள் தேர்விற்கு உரிய நடைமுறைகளை உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றுக் கூறிய நீதிபதிகள், போக்குவரத்துத் துறை பணியாளர்கள் தேர்விற்கு 3 மாதங்களில் தனி தேர்வு கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 

Trending News