Oil Price: சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு; டீசல் விலை குறைவு

இன்று பெட்ரோல் விலை அதிகரித்தும் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து குறைந்தும் இருக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2019, 07:52 AM IST
Oil Price: சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு; டீசல் விலை குறைவு title=

சென்னை: சனிக்கிழமையான இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 09 பைசா உயர்ந்து உள்ளது. அதேபோல டீசல் விலையில் 5 பைசாக்கள் குறைந்துள்ளது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (23.11.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து மாறாமல் இருந்தது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை அதிகரித்தும் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து குறைந்தும் இருக்கிறது. 

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம்செய்யப்பட்ட நடைமுறையாகும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News