நிபந்தனை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் - போக்குவரத்து தொழிலாளர்கள்!

நிபந்தனை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Last Updated : Jan 10, 2018, 02:13 PM IST
நிபந்தனை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் - போக்குவரத்து தொழிலாளர்கள்! title=

நிபந்தனை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடரில்,  ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நிலுவை தொகை ரூ.750 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து மற்ற போக்குவரத்துத் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் பழனிசாமி, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு, போக்குவரத்துக் கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக 750 கோடி ரூபாயினை பொங்கலுக்கு முன் வழங்கும் என்றார்.

மேலும், பொது மக்களின் நலன் கருதி, வேலைநிறுத்தத்தை கைவிட்டு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு  750 கோடி நிலுவைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிபந்தனைகள் முழுவதுமாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Trending News