திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பால் விஷம் குடித்த காதலர்கள்

பெற்றோர் எதிர்ப்பால், அச்சமடைந்த காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 17, 2022, 11:26 AM IST
  • பெற்றோர் எதிர்ப்பு
  • காதல் ஜோடி தற்கொலை முயற்சி
  • விஷம் குடித்து தற்கொலை
திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பால் விஷம் குடித்த காதலர்கள் title=

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பட்டாப்புளி தெருவைச் சேர்ந்த மணி என்பவரது மகன் பெரியசாமி (21). இவர் கூலி வேலை செய்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த நல்லயன் என்பவரது மகள் வித்தியா (19) முதலாமாண்டு கல்லூரியில் படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். எனவே இருவரும் காதலிக்கும் விவரம் இரு வீட்டு பெற்றோரும் தெரிய வந்த நிலையில் இருவரும் அண்ணன் தங்கை உறவு முறை வருவதால் இரு வீட்டு பெற்றோரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | மெடிக்கலில் போதை மாத்திரைகள் சப்ளை, சென்னையில் சிக்கிய கும்பல்

இதனால் மனமுடைந்த காதலர்கள் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தேவதானப்பட்டி அருகே தனியார் கல்லூரி பின்புறம் உள்ள தோட்டத்தில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர். விஷம் குடித்ததில் காதலி நித்தியா சம்பவத்தில் பலியானார். மேலும் காதலன் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பலியான நித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தேவதானப்பட்டி காவல்துறையினர் காதலர்கள் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எனவே அண்ணன் தங்கை உறவு முறையில் இருந்த ஆண், பெண் காதலித்து திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ததில் பெண் பலியானதால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனை: தலைச்சுற்ற வைக்கும் பகீர் பின்னணி!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News