இன்றைய வானிலை முன்னறிவிப்பு: டெல்டா மாவட்டங்களில் கனமழை...

மன்னார் வளைகுடா, குமரி கடல்பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது. 

Last Updated : Dec 22, 2018, 02:15 PM IST
இன்றைய வானிலை முன்னறிவிப்பு: டெல்டா மாவட்டங்களில் கனமழை... title=

மன்னார் வளைகுடா, குமரி கடல்பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில், காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. சென்னையில், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 

ராமேஸ்வரத்தில் 4 செ.மீ., பாம்பன் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென் தமிழகம், புதுவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு. மீனவர்கள் நாளை முற்பகல் வரை மன்னார் வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம். 2 நாட்களுக்கு மழை இருந்தாலும், அதன் பிறகு படிப்படியாக குறையும். 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 23% குறைவு; சென்னையில் இயல்பை விட 55% குறைவாக மழைப்பொழியும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

Trending News