திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலை கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் அறிவித்துள்ளார்....
2019 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. அப்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. இதையடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை துவங்கினார்.
அப்ப்போது அவர் பேசியதாவது; தமிழகம் பொருளாதார ரீதியில் வளமான மாநிலம்
GST வரி விதிப்பு முறைக்கு தமிழக அரசு வெற்றிகரமாக மாறியுள்ளது. GST அமலான பிறகு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு தொகை வழங்கப்படுவதில் தாமதம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 5,454 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மூலம் வசூலாகியுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட, திருவாரூர் மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் குடிசை வீடுகளுக்கு பதில் கான்கீரீட் வீடுகள்கட்டி தரப்படும். கஜா மறு சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்
அணை பாதுகாப்பு சட்ட முன்வடிவை திரும்ப பெற தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. சட்ட முன்வடிவில் உள்ள பலவற்றில் தமிழகஅரசின் கருத்துகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். சென்னை உவர்நீர் மின் வளர்ப்பு மையத்தை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட ஆய்வு செய்ய அனுமதி வழங்கியது, கோர்ட் உத்தரவை மீறும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அவர் மேலும், பேசுகையில், தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023 மாநில வளர்ச்சிக்கு பேருதியாக இருக்கும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை திகழ்கிறது அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் கோவையில் கரும்பு ஆராய்ச்சிக்கான நிறுவனம் மூட வேண்டும் என்ற முடிவை கைவிட வேண்டும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தை புரட்சி தலைவர் டாக்டர் MGR மத்திய ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தொழில்முனைவோர் தொழில்துவங்க, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
சென்னை மதுரை, கோவையில் மின்சார பஸ்கள் இயக்கப்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ள குடிசை பகுதியை மேம்படுத்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் உதவியுடன் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்தய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உரையாற்றினார்.