தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவிக்கையில்...
"அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
எனவே நாளை வரை குமரி கடல், தென் மாவட்ட கடல் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி கடல், தென்மாவட்ட கடல் பகுதியில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வழக்கத்தைவிட 12% அதிகமாக வடகிழக்கு பருவமழை பொழியும். அக்டோபர் இரண்டாவது வாரத்திலிருந்து வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, அரியக்குடி, கோட்டையூர், கழனிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்ககது.