கோயில் வாசலில் பிச்சை எடுக்கும் பாட்டியின் வங்கி கணக்கில் ₹.2 லட்சம்..!

புதுவையில் கோயில் வாசல் முன் பிச்சை எடுக்கும் பாட்டியின் வங்கி கணக்கில் ₹.2 லட்சம் சேமிப்பு..!

Updated: Nov 8, 2019, 11:33 AM IST
கோயில் வாசலில் பிச்சை எடுக்கும் பாட்டியின் வங்கி கணக்கில் ₹.2 லட்சம்..!

புதுவையில் கோயில் வாசல் முன் பிச்சை எடுக்கும் பாட்டியின் வங்கி கணக்கில் ₹.2 லட்சம் சேமிப்பு..!

புதுச்சேரியில் பிச்சை எடுக்கும் பாட்டியிடம், வங்கிக்கணக்கு இருப்பதும், அதில் லட்சக்கணக்கில் பணமும், கையில் தங்க செயின், மோதிரம், தோடு மற்றும் ரூ.15,000 ரொக்கம் இருப்பதையும் கண்டு நகராட்சி ஊழியர்களை வாயடைத்துப் போயினர்.

புதுவை மகாத்மாகாந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக அந்த கடைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளன.

ஏற்கனவே அங்கு கடைகள் வைத்திருந்தவர்களுக்கு மீண்டும் வாடகைக்குவிட நிர்வாகம் முடிவெடுத்தது. இதையொட்டி அந்த கடைகளின் முன்பு நடைபாதையில் தங்கி இருந்த பிச்சைக்காரர்களை கோவில் நிர்வாகம் அப்புறப்படுத்தியது. புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள ஈஸ்வரன் கோவிலில் பிச்சைக்காரர்களால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாக வந்த புகாரை அடுத்து அவர்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பர்வதம்(80) என்ற பாட்டியை அப்புறப்படுத்திய போது அவரிடமிருந்த பை தவறி கீழே விழுந்தது. 

அதிலிருந்து ரூபாய் நோட்டிகள் சிதறி கீழே விழுந்தன. இதனையடுத்து அதனை எண்ணி பார்க்கும் போது, அதில் 15 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் இருந்தது. தெருவில் வசித்த மூதாட்டியிடம் கத்தை கத்தையாக பணம், நகைகள் மற்றும் வங்கி கணக்குகளில் ஒருலட்சம் ரூபாய் வரை இருப்பு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.