தமிழக முதல்வர் பழனிசாமியுடன் ரஜினி சந்திப்பு!!

தமிழக முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். 

Updated: Feb 10, 2019, 08:15 AM IST
தமிழக முதல்வர் பழனிசாமியுடன் ரஜினி சந்திப்பு!!

தமிழக முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். 

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்துள்ளார். தனது மகள் திருமணத்தில் பங்கேற்க தமிழக முதல்வரை சந்தித்து அழைப்புதல் வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்தி இன்று நேரில் சென்றார். அப்போது அவர் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார்.