நடிகர்கள் ரஜினியும், கமலும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இதற்க்கு ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் சிஸ்டம் இந்தியாவில் சரியில்லையா? தமிழகத்தில் சரியில்லையா? என்றும் அரசியலில் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ரஜினி, முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டியுள்ளது என்றார்.
கமல் ஹாசனும் நானும் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு உண்மையில் காலம்தான் பதில் சொல்லும். எங்கள் இருவரின் கொள்கை ஒன்றாக பொருந்துகிறதா என பார்க்க வேண்டும் என்றார்.
முன்னதாக நடிகர் கமல் ஹாசன் கூறும்போது, ரஜினியும் - நானும் இணைந்து செயலாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினியும் அது போன்ற பதிலைக் கூறியுள்ளார்.
Only time will answer this question: Rajinikanth on whether he will ally with Kamal Haasan. #Rajinikanth pic.twitter.com/HsarmnFcdN
— ANI (@ANI) February 8, 2018
மேலும், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் போட்டியிடுவது பற்றி உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று ரஜினிகாந்த் கூறினார்.