ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்க்கு மகனின் திருமணத்திற்காக 30 நாட்கள் பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!!
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸுக்கு 30 நாள் பரோலில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மகன் தமிழ்கோ திருமண வேலைகளை கவனிக்க பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் ராபர்ட் பயஸ் மனுதாக்கல் செய்திருந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ் உட்பட 7 பேரும் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு ரத்து செய்தது.
இவர்கள் தற்போது தங்கள் விடுதலைக்காக போராடி வருகிறார்கள். அதே சமயம் இந்த வழக்கில் சிறையில் இருந்து பேரறிவாளன் தற்போது 1 மாதம் பரோலில் விடுதலை ஆகியுள்ளார். அப்பாவின் உடல் நலத்தை காரணம் காட்டி அவருக்கு பரோல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ராபர்ட் பயஸும் 1 மாதம் பரோலில் வெளியே வந்துள்ளார். அவரின் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் பரோல் கேட்டு இருந்தார். 30 நாட்கள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.