Ranipet Crane Accident: ராணிப்பேட்டை அம்மன் கோயில் திருவிழாவில் கிரேன் விபத்து - 3 பேர் பலி

Ranipet Crane Accident: ராணிப்பேட்டை அருகே அம்மன் கோயில் திருவிழா வழிபாட்டின்போது, கிரேன் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 23, 2023, 06:17 AM IST
  • 7 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
  • இச்சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.
Ranipet Crane Accident: ராணிப்பேட்டை அம்மன் கோயில் திருவிழாவில் கிரேன் விபத்து - 3 பேர் பலி title=

Ranipettai Crane Accident: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கீழ்வீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழாவில் அம்மன் திருவீதி உலாவின்போது, கிரேன் முலம் ஆகாய மாலை அணிவிக்க முயன்றபோது கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்த நிலையில் அரக்கோணம் அரசு மருத்துவமனை மற்றும் புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்கள். 

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் நேற்றிரவு (ஜன. 22) மண்டியம்மன் கோயிலில் மயிலேறு திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் ஒரு பகுதியாக அம்மன் திருவீதி உலா புறப்பட்டது. அப்போது பக்தர் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அம்மனுக்கு கிரேனில் தொங்கியபடி ஆகாய மாலை அணிவிக்க முயன்றார். 

மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தல்: மகனுக்கு பதிலாக களமிறங்கிய ஈவிகேஎஸ்..! எதிர்கட்சிகளுக்கு வைத்த செக்

அப்போது திடீரென கிரேன் சாய்ந்தது. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 பேரும், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இதில் முத்து(42), ஐஸ் வியாபாரி பூபாலன்(39), புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற  கீழ்ஆவதத்தை சேர்ந்த ஜோதி(29) உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் அரக்கோணம் அரசு மருத்துவமனை திவீர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்கள். புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.

மேலும் படிக்க | ஜல்லிக்கட்டில் சிறுவன் மாடு குத்தி இறந்ததற்கு, பாதுகாப்பு இல்லாததே காரணம்: கே.பி.அன்பழகன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News