கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவர் சிவராமன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

Last Updated : Jul 18, 2018, 03:16 PM IST
கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி! title=

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவர் சிவராமன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல் அருங்குணம் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் என்பவரது மகன் சிவராமன். செஞ்சியில் உள்ள அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில், தற்போது கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. கழிவுநீர் தொட்டி அமைத்து அதில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது. அங்கு சென்ற மாணவன் தொட்டியில் இருந்த தண்ணீரை எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான்.

அவருக்கு நீச்சல் தெரியாததால் உதவிக்கு மற்றவர்கள் வரும் முன் அவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையடுத்து மாணவர் சிவராமன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

 

Trending News