தமிழகத்தில் தடுப்பு அணைகள் கட்ட ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

Last Updated : Nov 12, 2017, 06:24 PM IST
தமிழகத்தில் தடுப்பு அணைகள் கட்ட ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு! title=

நெல்லை: தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த வகையினில் இன்று நெல்லையில் பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. விழாவில் முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் நிகழ்ச்சியில் பேசியதாவது;

"தமிழகத்தின் பல்வேறு ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.300 கோடி செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீர் விவசாயம், குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்" என தெரிவித்தார். மேலும் குறை கூறுவோர் கூறிக்கொண்டுதான் இருப்பார்கள்; அதிலும் திமுக அதிகமாகவே குறை கூறுகின்றது." எனவும் தெரிவித்தார்!

Trending News