வர்தா புயல்: நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

வங்க கடலில் உருவான வார்தா புயல் சென்னைக்கு வடக்கே 10 கிமீ தொலைவில் கரையை கடந்தது.

Last Updated : Dec 15, 2016, 08:33 AM IST
வர்தா புயல்: நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு title=

சென்னை: வங்க கடலில் உருவான வார்தா புயல் சென்னைக்கு வடக்கே 10 கிமீ தொலைவில் கரையை கடந்தது.

சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை இந்த வர்தா புயல் சின்னாபின்னமாக்கி விட்டது.

புயல் காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னையில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின்கம்பங்களும் சாய்ந்தன. 

புயல் நிவாரண பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சாய்ந்து கிடக்கும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியும், மின்கம்பங்களை சரி செய்து மின்சார வினியோகத்தை சீர்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புயல் நிவாரண பணிக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

வார்தா புயலால் பாதிப்பு அடைந்த இடங்களை சீர் செய்ய தமிழக அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளன.

Trending News