மொளச்சூர் முருகன் கோவிலுக்கு வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்கள் வழங்கிய சசிகலா!

மொளச்சூர் முருகன் கோவிலுக்கு ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்களை சசிகலா வழங்கினார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 19, 2022, 12:02 PM IST
மொளச்சூர் முருகன் கோவிலுக்கு வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்கள் வழங்கிய சசிகலா! title=

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள மொளச்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரானா பரவல் வழிகாட்டி விதிமுறைகளின்படி, தைப்பூச தினமான நேற்று, கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இன்று தைப்பூச விழாவை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடைபெற்ற தைப்பூச விழா (Thaipusam Festival) சிறப்பு பூஜையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், முன்னாள் அதிமுக பொதுச் செயலாளருமான வி.கே. சசிகலா கலந்துகொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கும் முருகப்பெருமானுக்கு 35 லட்ச ரூபாய் மதிப்பில்  4 அடி உயரமும் 35 கிலோ எடையும் கொண்ட வெள்ளி கவசத்தையும், தங்க கண் மலர்களையும் காணிக்கையாக வழங்கி சுவாமி தரிசனம் செய்தார்.

ALSO READ | பழனி தைப்பூச விழா; அனுமதி மறுக்கப்பட்டும் அலைமோதும் பக்தர்கள்

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் மொளசூர் பெருமாள்,
அமமுக நிர்வாகிகள் நாராயணசாமி, ரஜினி குமாரவடிவேல், சக்திவேல், திருவேங்கடம், ஜெகதீஷ், பார்த்தசாரதி,
எல் ராஜேந்திரன், காந்தூர் சிவா, ஸ்ரீபெரும்புதூர் சதீஷ் நரேஷ, ராதாகிருஷ்ணன், கல்யாணம் ஜெயகாந்தன், உள்ளிட்ட ஏராளமான முக்கிய நிர்வாகிகளும் கிராம பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

ALSO READ | Thaipusam 2022: பழனியில் தைப்பூசம் கோலாகல கொடியேற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News