தமிழகத்தில் பழனி முருகன் கோயில் தைப்பூச விழா மிகவும் பிரசித்து பெற்றதாகும். கொரோனா பேரிடர் காரணமாக பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்றாலும், கிரிவலப் பாதையில் தைப்பூசத்தை முன்னிட்டு கைகளில் சூடம் ஏற்றி சூரிய வழிபாடு செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா (Thaipusam Festival) கடந்த 12ஆம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனா பரவல் காரணமாக 14ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், 10 நாட்கள் நடைபெறும் தைப்பூச விழாவில் எந்த ஒரு நிகழ்வுக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ALSO READ | தைப்பூச பழனி முருகன் கோவில் தேர்த் திருவிழா
இன்று தைப்பூச விழா என்பதால் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றாலும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் வலம்வந்து கைகளில் சூடம் ஏற்றி சூரிய நமஸ்காரமும் முருகனை வழிபட்டனர்.
மேலும் பாத விநாயகர் கோயிலில் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்து கிரிவலப் பாதையை வலம் வருகின்றனர். நேற்று இரவு திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி மயில் வாகன தேரோட்டம் சீரும் சிறப்புடன் நடைபெற்றது.
அதே போல இன்றும் தைப்பூசத் திருத்தேரோட்டம் மாலை நடைபெற உள்ளது. அந்நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில் வளாகத்துக்குள்ளேயே சிறிய தேரில் வலம் வருகிறது. மேலும் தைப்பூசமான இன்று பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும் என்பதால், பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ALSO READ | Thaipusam 2022: பழனியில் தைப்பூசம் கோலாகல கொடியேற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR