சாத்தான்குளம் விவகாரம் எதிரொலி!! தூத்துக்குடி எஸ்.பி உட்பட பல அதிகரிக்கள் இடமாற்றம்

சாத்தான்குள சம்பவத்தை அடுத்து, தெற்கு மண்டல போலீஸ் நிர்வாகத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. எஸ்.முருகன் ஐ.பி.எஸ் புதிய ஐ.ஜி.பி.யாக தெற்கு மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 30, 2020, 01:37 PM IST
சாத்தான்குளம் விவகாரம் எதிரொலி!! தூத்துக்குடி எஸ்.பி உட்பட பல அதிகரிக்கள் இடமாற்றம் title=

தூத்துக்குடி: சாத்தான்குள சம்பவத்தை அடுத்து, தெற்கு மண்டல போலீஸ் நிர்வாகத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. எஸ்.முருகன் ஐ.பி.எஸ் புதிய ஐ.ஜி.பி.யாக தெற்கு மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஜி.பி அலுவலகத்தில் தூத்துக்குடி எஸ்பி அருண் கோபாலன் கட்டாய காத்திருப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். கோபாலனுக்கு பதிலாக வில்லுபுரம் எஸ்.பி.

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை என்ற பெயரில். கொடூரமாக தாக்கியதால், அவர்கள் போலீஸ் காவலில் இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு துணை ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இடைநீக்கம் செய்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு சட்டத்தின் படி தண்டனை வழங்க வேண்டும், அதேநேரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது.

READ MORE | கைது செய்.. கைது செய்... சமூக ஊடகங்களில் வலுக்கும் கோரிக்கை #JusticeForJeyarajAndFenix

READ MORE | சாத்தான்குளம் வழக்கு CBI விசாரணைக்கு மாற்றப்படும்; தமிழக முதல்வர் உறுதி

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

இதுவரை எந்தவித நடவடிக்கையும் சரியாக எடுக்கவில்லை என தமிழக அரசு மீது குற்றசாற்று எழுந்ததால், இன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் தற்போது தூத்துக்குடி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தென்மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் ஓய்வு பெறுவதால் புதிய ஐ.ஜியாக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி டி.ஜி.பி அலுவலகத்தில் எஸ்பி அருண் கோபாலன் கட்டாய காத்திருப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

Trending News