ஜல்லிக்கட்டு வழக்கில் 1 வாரத்துக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு ஒரிரு நாட்களில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இன்று அறிவித்தார்.

Last Updated : Jan 20, 2017, 12:03 PM IST
ஜல்லிக்கட்டு வழக்கில் 1 வாரத்துக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு title=

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு ஒரிரு நாட்களில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இன்று அறிவித்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையில் குறுக்கீடாமல் இருக்க ஜல்லிக்கட்டு வழக்கில் 1 வாரத்துக்கு தீர்ப்பு வழங்க கூடாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று கோரிக்கை வைத்தது.

இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வக்கீல் முகுல் ரோகத்கி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அடுத்த 1 வாரத்துக்கு ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க கூடாது.

மத்திய அரசின் இந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். அவசர சட்ட நடவடிக்கையில் தலையிடாமல் இருக்க 1 வாரத்திற்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Trending News