பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்: எடப்பாடி அறிவிப்பு!!

ஜெயலலிதா பிறந்தநாளன்று 1 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்குவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி அறிவித்துள்ளார்.  

Last Updated : Dec 30, 2017, 04:22 PM IST
பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்: எடப்பாடி அறிவிப்பு!! title=

ஊட்டியில் இன்று முதல்-அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 

இதில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் பழனிசாமி;- முதற்கட்டமாக ஜெயலலிதா பிறந்தநாளன்று, 1 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும். அத்துடன் பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ 2 மானியம் வழங்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தின் மண்டல் அலுவலகம் கோத்தகிரியில் அமைக்கப்படும்.

ரூ 2.73 கோடியில் உதகை நகராட்சியில் புதிய சாலைகள் அமைக்கப்படும். ரூ 44 லட்சம் செலவில் குன்னூர் பேருந்துநிலையம் விரிவுபடுத்தப்படும்.நீலகிரியில் வாழும் பழுங்குடியினரின் 500 குடியிருப்புகள் ரூ 5 கோடியில் பழுதுபார்க்கப்படும் என்றார்.

கிரிமினல்கள் கண்டுபிடித்த வார்த்தை தான் ஸ்லீப்பர் செல், டிடிவி. தினகரன் இடத்தில் இருப்பவர்கள் வேண்டுமானால் ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம், எங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் பத்தரை மாத்து தங்கங்கள் தான். ஏனெனில் எங்கள் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றார்.

மேலும் அவர், டிடிவி தினகரன் உழைக்காமல் முன்னுக்கு வந்தவர் கொஞ்ச நாட்களுக்குதான் கிடைத்த பதவியை அவர் அனுபவிக்க முடியும். 6 மாதத்தில் அவர் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருப்பார் என்றும் வலியுறித்தினார்.

இதில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம்;- ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதலமைச்சர் ஆகலாம் என சதி திட்டம் போட்டவர் தினகரன். அதிமுகவை வீழ்த்த எத்தனை சதித்திட்டம் தீட்டினாலும், அசைக்க முடியாது. 

தினகரனை கட்சியில் சேர்க்க கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். எம்,ஜி,ஆர் திரைப்படங்களில் முக்கிய இடம் பிடித்தது நீலகிரி. மன்னிப்பு கடிதம் தந்த சசிகலாவை பாவம் பார்த்து ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.

ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தது டிடிவி தினகரன் தரப்பு தான், தற்போது ஜெயலலிதா காட்சிய தர்மத்தின் பாதையில் அதிமுக சென்று கொண்டிருக்கிறது என்றார்.

Trending News